"அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு'' -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.

திம்மாவரம் ஊராட்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி நம்மிடம், "பட்டியலின மக்களான நாங்கள், பாலாற்றங்கரையோரத்தில் வசித்து, வெள்ளப்பெருக்கில் உடைமைகளை இழந்த நிலையில், 1983ஆம் வருடம், திம்மாவரம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப் பகுதியில் தற்காலிகக் குடிசை போட்டுத் தங்கினோம்.

Advertisment

cc

ஊர்க்காரங்கள் எங்களை காலிபண்ணச் சொன்னாங்க. குடிக்க, குளிக்க, விவசாயம் பண்ண தண்ணி கூட தராம கொடுமை பண்ணினாங்க. எங்களை காலிபண்ணச் சொல்லி ஊர்க்காரங்க போட்ட வழக்கை, சில அமைப்புகளோட உதவியால ஜெயிச்சோம்.

அப்புறம் எங்க குடிநீர்த் தேவைகளுக்காக நாங்களே அடிபம்பு வசதி செஞ்சோம். அப்போ வந்த தேர்தலப்ப, தலைவரா போட்டியிட்ட ஸ்ரீராமன், ஆதிகேசவன் ஆகியோர், அவங்களுக்கு வாக்களிச்சா அடிப்படை வசதிகள் செய்துதர்றதா சொன்னாங்க. அப்படி ஜெயிச்சு வந்தவங்க, தெருவிளக்கு, மின்வசதி, சாலை, குடிநீர் வசதி செஞ்சுகுடுத்தாங்க.

Advertisment

அடுத்ததா கலைஞர் ஆட்சியில் பட்டா கேட்டு விண்ணப்பிச்சோம். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த இறையன்பு பார்வையில், எங்க 55 குடும்பங்களுக்கு செங்கல்பட்டு அடுத்த பாலூர் முகாம்ல இலவச பட்டா வழங்கினார்கள். அடுத்ததா எங்க மக்களோட கல்வி வளர்ச்சிக்காக, புத்தர் பன்னாட்டுப் பேரவை இளைஞர் மன்றம் என்ற பெயரில் ஒரு குடிசையில் படிப்பகம் துவங்கினோம். அப்போதைய துணை ஆட்சியர் யுவராஜ் மித்தல் அதைத் திறந்துவைத்தார். குழந்தைகளுக்கு காலையில் அங்கன்வாடி போலவும், மாலையில் இரவு பாடசாலை போலவும் பயன்படுத்தி வந்தோம். எங்களது நிலை யறிந்த சி.எஸ்.ஐ. அமைப்பினர், எங்கள் குடிசைக்கு பதிலாக ஓட்டுக் கட்டடம் கட் டிக்கொடுத்து, ஆசிரியைகளை நியமித்தனர். குழந்தைகளுக்கு, காலையில் முட்டை, வாழைப்பழம், பால் மற்றும் மதிய உணவளித்து ஒரு மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர் அர சாங்கமே உதவ முன்வந்தது. புதுக்கட்டடம் அமைத்து, அரசாங்கமே அங்கன்வாடி டீச்சரையும், ஒரு ஆயாவையும் நியமித்தது. அரசாங்கம் வழங்கும் ஊட்டச்சத்துப் பொருட்களும், உணவும் வழங்கப்பட்டது.

அந்த கட்டடம், குழந்தைகளுக்கு அங்கன் வாடியாக, மாணவர்களுக்கு இரவு பாடசாலை யாக, இளைஞர்களுக்கு அறிவு போதனை வளர்க்கும் இடமாக மற்றும் மகளிருக்கு சுய உதவிக் குழு, கைத்தொழில் பயிற்சியகமாக எனப் பல்வேறு வகையில் அம்பேத்கர் படிப்பகம் என்ற பெயரில் செயல்பட்டுவந்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அருள்தேவி என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி யேற்றார். அவரிடம் ஊர் மக்கள் எந்த உதவி கேட்டாலும் செய்து தரமாட்டார். இந்த கட்ட டத்தின் செயல்பாடும் பிடிக்காமல், இடித்துத் தரைமட்டமாக்குவதிலேயே குறியாக இருந்தார்.

cc

Advertisment

இந்நிலையில், 2021ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அருள்தேவி, அவரது உறவின ரான எங்கள் கிராமத்தலைவர் முனியாண்டி மூலமாக எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதருவதாகக்கூறி வாக்கு கேட்டார். நாங்களும் நம்பிக்கையோடு வாக்களிக்க, மீண்டும் வெற்றிபெற்றார்.

அரசு சார்பில் தாசில்தார், வி.ஏ.ஓ. ஆகி யோர் சர்வே எண் 1114-ல் இடம் ஒதுக்கி, சுமார் 8 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டித் தர நடவடிக்கை எடுத்துவந்தனர். இந்நிலையில் திடீரென்று கடந்த நவம்பர் 25ஆம் தேதி பொக்லைன் இயந்திரத்துடன் வந்த கவுன்சிலர் அருள்தேவி உள்ளிட்ட சிலர், சம்பந்தமேயில் லாமல் அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முற் பட்டனர். அம்பேத்கர் படத்துடன் வைத்திருந்த பெயர்ப் பலகையை கிழித்துப்போட்டனர்.

பதறிப்போன நாங்கள் அதைத் தடுத்த போது, அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிர மித்ததாகக் கூறி, அதை இடிக்க கிராமப் பஞ்சா யத்தில் தீர்மானம் போட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் அப்படியான தீர்மானமே போடப்பட வில்லை. அம்பேத்கரின் பெயரிலான படிப் பகத்தை ஒரு பட்டியலின கவுன்சிலரே இடிக்க முற்பட்டது எங்களைக் கொதிப்படைய வைத்தது.

அங்கிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் நடராஜன் எங்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்த மாக புகாரளித்தால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந் தார். ஆனால் எங்கள் புகார்மீது இப்போது வரை நடவடிக்கையில்லை. எப்படியாவது படிப் பகத்தை இடித்தே தீருவேனென்று சுற்றிச்சுற்றி வருகிறார். என்னை அ.தி.மு.க. என்றும் முத்திரை குத்தப்பார்க்கிறார். நான் கடந்த பத்தாண்டு களாக வேறு அமைப்பில் இருக்கிறேன். இவ ரால் ஆளுங்கட்சிக்குத்தான் கெட்ட பெயர்'' என்றார்.

இதுகுறித்து கவுன்சிலர் அருள்தேவியை செல்போனில் தொடர்புகொண்டபோது, "நீங்கள் முதலில் ரிப்போர்ட்டரா என்பது எனக்கு எப்படி தெரியும்? நேரில் வந்தால் தகவல் கூறுகிறேன்'' என்று தொடர்பைத் துண்டித்தார்.

மாவட்ட ஆட்சியர் அருள்ராஜும் எப்போதும்போல் தொடர்பை எடுக்கவில்லை. மாநிலமெங்கும் நூலகங்களையும், புத்தகக் கண்காட்சியையும் திறந்துவைக்கும் திராவிட மாடல் ஆட்சியில் படிப்பகத்தை இடிக்க கவுன்சிலர் முனைவது கண்டிக்கத்தக்கது!